நாடாளுமன்ற தேர்தலில் கண்டிப்பாக போட்டியிடுவோம் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை வேப்பேரியில் உள்ள ஒய்.எம்.சி.ஏ ஹாலில் ஓ.பி.எஸ் -அணியின் தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம், கட்சியின் ஆலோசகரான பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
.
அப்போது கட்சியின் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் பேசியதாவது:
“நாடாளுமன்ற தேர்தல் பணிகளை எந்த கட்சி தொடங்குகிறதே, தொடங்கிவில்லையோ அதைப்பற்றி நமக்கு தேவை இல்லை. நாடாளுமன்ற தேர்தல் பணிகள் நாம் செய்ய வேண்டும். யாருக்காகவும் காத்திருக்க கூடாது. இரு தரப்பும் ஒன்று சேர்ந்தால் கட்சி ஒற்றுப் போகும். ஆனால் அவர்கள் சமாதானத்திற்கு ஒத்துப் போக மாட்டார்கள். நாங்களும் ஏற்றுக் கொள்ளமாட்டோம்.
பொதுச்செயலாளர் என்பது தேர்தல் கமிஷன் தான் முடிவு எடுக்க வேண்டும் . பொதுச் செயலாளர் பதவி யாருக்கு என்று இன்னும் நிலுவையில் தான் உள்ளது. இரட்டை இலை இருவருக்கும் பொதுவாக தான் உள்ளது. இன்னும் இரட்டை இலை ஒருவருக்கு தான் என்று முடிவு செய்யவில்லை அதை நீதிமன்றம் தான் முடிவெடுக்க வேண்டும்
கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் செப்டம்பர் 3 ஆம் தேதி காஞ்சிபுரத்தில் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள உள்ளார். இந்த சுற்று பயணம் ஒவ்வொரு மாவட்டமாக சென்று கட்சியினை தொண்டர்களை நேரில் சந்திக்க உள்ளார் என அவர் தெரிவித்தார்.
பின்னர் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பேசியதாவது :
“மறைந்த முன்னாள் முதலமைச்சர் கொண்டுவந்த சட்ட விதிகளை எடப்பாடி பழனிச்சாமி மதிக்கவில்லை. எங்கள் சார்பில் திருச்சியில் நடைபெற்ற மாநாடு தமிழ்நாட்டை மட்டுமின்றி டெல்லியையே திருப்பி பார்க்க வைத்தது.
அடுத்தாண்டு நாடாளுமன்ற நடைபெற இருக்கும் நிலையில் ஒவ்வொரு பகுதியில் பூத் கமிட்டி அமைக்க வேண்டும். அந்த பணி இன்னும் ஒரு மாதத்திற்க்குள் முடிக்க வேண்டும். ஒவ்வொரு பகுதியில் இருக்கும் உறுப்பினர் பெயர் பட்டியல் முழு விவரங்களை விரைவில் எடுக்க வேண்டும். அப்படி செய்தால் தான் தேர்தலில் யாரை நிற்க வைக்க வேண்டும் என தெரியும்.இந்த பணிகளை வரும் டிசம்பர் மாதத்திற்குள் நிறைவேற்ற வேண்டும்.
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவோமா இல்லையா என்று பேசுகிறார்கள் ஆனால் கண்டிப்பாக நாம் போட்டியிடுகிறோம். நாங்கள் காஞ்சிபுரத்தில் இருந்து சுற்று பயணம் மேற்கொள்ள இருக்கும் காரணம் தமிழ்நாட்டில் முன்னாள் தலைநகரம் காஞ்சிபுரம்.அதனால் தான் நாங்கள் காஞ்சிபுரத்திலிருந்து பயணம் மேற்கொள்ள இருக்கிறோம். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், மதுரை மாநாடு தோல்வி அடைந்துள்ளது என்றார்.







