சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: மகளிர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார் கோகோ காப்! 

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில் கரோலினா முசோவாவை வீழ்த்திய கோகோ காப் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் அமெரிக்க வீராங்கனை கோகோ காப், செக் குடியரசை சேர்ந்த கரோலினா…

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில் கரோலினா முசோவாவை வீழ்த்திய கோகோ காப் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் அமெரிக்க வீராங்கனை கோகோ காப், செக் குடியரசை சேர்ந்த கரோலினா முர்சோவை சந்தித்தார்.
ஆரம்பம் முதலே கோகோ சாப் அதிரடியாக விளையாடினார். இதனால் முதல் செட்டை 6-3 என்ற கணக்கில் அவர் கைப்பற்றினார். இதேபோல் அடுத்த செட்டிலும் ஆக்ரோஷமாக விளையாடிய கோகோ சாப் 6-4  என்ற கணக்கில் கைப்பற்றி சாம்பியன் பட்டம் வென்றார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.