அயர்லாந்துக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் வெற்றி பெற்ற இநதிய அணி தொடரையும் கைப்பற்றியுள்ளது.
இந்தியா, அயர்லாந்து அணிகள் இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி டப்ளினில் நடைபெற்றது. டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பீல்டிங் செய்ய முடிவு செய்தது. இதனையடுத்து களம் இறங்கிய அணி வீரர்கள் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழந்த இந்திய அணி 185 ரன்கள் குவித்தது. ருதுராஜ் கெய்க்வாட் 58, சாம்சன் 40 , ரிங்கு சிங் 38 ஷிவம் துபே 22 ரன்கள் சேர்த்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து அணி களம் இறங்கியது. ஒரு முனையில் தொடக்க ஆட்டக்காரர் பால்பிரின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 72 ரன்கள் சேர்த்தார். மறுமுனையில் விக்கெட்டுகள் சரிந்தன.
முடிவில் அந்த அணியால் 152 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது. பும்ரா, பிரசித் கிருஷ்ணா, ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்