முக்கியச் செய்திகள் தமிழகம்

“பாஜகவை தமிழ்நாட்டில் வீடு வீடாக கொண்டு சேர்ப்போம்” – பாஜக தலைவர் அண்ணாமலை

பாஜகவின் சித்தாந்தத்தையும், உயிரான தேச பற்றையும், தமிழக மக்கள் மீது பிரதமர் கொண்டுள்ள பேரன்பையும் தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிற்கும் எடுத்துச் செல்லும் வரை நாங்கள் ஓய மாட்டோம் என பாஜகவின் தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா எனக்கு வழங்கியிருக்கும் தமிழக பாஜக தலைவர் எனும் பொறுப்பு என்னை பணிவும், பெருமையும் கொள்ள செய்கிறது. பாஜக பல ஆண்டுகளாக பல காரியகர்த்தாக்களின் உயிர் தியாகங்களாலும், தன்னலமற்ற தலைவர்களின் தியாகங்களாலும் வழிநடத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பாஜகவின் மூத்த தலைவர்களின் வழிகாட்டுதலுடன் ஒரு அணியாக நாம் அனைவரும் ஒன்றிணைந்து தேசிய தலைமை என்மீது வைத்துள்ள நம்பிக்கையை போற்றும் விதமாக உறுதியுடன் நடப்போம்.

பாஜகவின் சித்தாந்தத்தையும், உயிரான தேச பற்றையும், தமிழக மக்கள் மீது பிரதமர் கொண்டுள்ள பேரன்பையும் தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிற்கும் எடுத்துச் செல்லும் வரை நாங்கள் ஓய மாட்டோம்” என பாஜகவின் தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் தமிழக பாஜக தலைவரான எல்.முருகன் மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் புதிய தலைவராக ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
SHARE

Related posts

யானைகளுக்கு கொரோனா பரிசோதனை: அமைச்சர் தகவல்!

Ezhilarasan

10நாட்களுக்கு “ஆபரேஷன் பாபகுலி ஒத்திவைப்பு

Vandhana

ஏடிஎம் கொள்ளை: பண இருப்பை கண்டறியும் செயலி பயன்படுத்தப்பட்டதாக விசாரணையில் தகவல்

Vandhana