’ஒவ்வொரு நொடியும் சாதனை செய்ய முயற்சிக்க வேண்டும்’ – ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்

ஒவ்வொரு மணி நேரமும் முக்கியமானது என்பதை கொரோனா கற்றுக்கொடுத்துள்ளது எனவும், ஒவ்வொரு நொடியும் சாதனை செய்ய முயற்சி செய்ய வேண்டும் எனவும் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள தனியார்…

ஒவ்வொரு மணி நேரமும் முக்கியமானது என்பதை கொரோனா கற்றுக்கொடுத்துள்ளது எனவும், ஒவ்வொரு நொடியும் சாதனை செய்ய முயற்சி செய்ய வேண்டும் எனவும் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள தனியார் விடுதியில் விகடன் குழுமம் சார்பில் பினாக்கிள் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக கலந்து கொண்ட தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், சமூக சேவை, விவசாயம், சிறந்த தொழில் முனைவோர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு விருதுகளை வழங்கினார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், ஸ்டார்ட் அப் திட்டம் சிறந்த முறையில் இந்தியாவில் செயல்படுத்தப்பட்டு வருவதாக கூறினார். மேலும் ஒவ்வொரு மணிநேரமும் முக்கியமானது என்பதை கோவிட் கற்றுக்கொடுத்துள்ளதாக தெரிவித்தார்.

வாழ்ந்து கொண்டிருக்கும் நொடியிலேயே சாதனை செய்ய முயற்சிக்க வேண்டும் என்று பேசிய தமிழிசை செளந்தரராஜன், எவ்வளவு பணிகள் இருந்தாலும் எந்த சூழ்நிலையிலும் உடல்நலத்தைப் பேணி பாதுகாக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.