“சுற்றுச்சூழலை பசுமையாகவும், சிறப்பாகவும் மாற்ற வேண்டும்” – குடியரசு தலைவர் முர்மு, பிரதமர் மோடி பதிவு!

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு குடியரசு தலைவர், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளனர்.

உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உலக சுற்றுச்சூழல் தினம் ஆண்டு தோறும் ஜூன் 5ம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று உலக சுற்றுசூழல் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

இந்த நிலையில் சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்து குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

குடியசரசு தலைவர் திரௌபதி முர்மு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “கிரகத்தைப் பாதுகாப்பதில் மக்கள் தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும். வளங்களைப் பாதுகாக்கவும், சுற்றுச்சூழலுக்கு உகந்த நடத்தையை ஊக்குவிக்கவும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். சுற்றுச்சூழலுக்கான ஒவ்வொரு செயலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகிறது. மேலும் நமது கூட்டு முயற்சிகள் எதிர்கால சந்ததியினருக்கு பசுமையான பூமிக்கு வழிவகுக்கும்”. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “உலக சுற்றுச்சூழல் தினத்தில், நமது கிரகத்தைப் பாதுகாப்பதற்கும், நாம் எதிர்கொள்ளும் சவால்களைச் சமாளிப்பதற்கும் நமது முயற்சிகளை ஆழப்படுத்துவோம். நமது சுற்றுச்சூழலை பசுமையாகவும் சிறப்பாகவும் மாற்ற அடிமட்டத்தில் பாடுபடும் அனைவரையும் நான் பாராட்டுகிறேன்”. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.