முக்கியச் செய்திகள் தமிழகம்

நீட் தேர்வுக்காக 17 பேரை பலிகொடுத்துள்ளோம் : திருமாவளவன்

தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்காக 17 பேரை பலிகொடுத்துள்ளதாகவும், அதற்கு மோடி அரசு முழு பொறுப்பேற்க வேண்டும் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

காட்பாடி அருகே, தலையாரம்பட்டு கிராமத்தில், நீட் தேர்வு தோல்வி அச்சம் காரணமாக, சௌந்தர்யா என்ற மாணவி தற்கொலை செய்துகொண்டார். மாணவியின் வீட்டிற்கு நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த தொல் திருமாவளவன், மாணவியின் குடும்பத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உயிரிழந்த மாணவி சௌந்தர்யாவின் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என தெரிவித்தார். மேலும், தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு குடியரசு தலைவர் விரைவாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

9 மாவட்டங்களில் நடைபெறும் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் விசிக தனி சின்னத்தில் போட்டியிட உள்ளதாக அவர் தெரிவித்தார். ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் இடங்களுக்கு தென்னைமர சின்னத்திலும், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் இடங்களுக்கு கைக்கடிகாரம் சின்னத்திலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடுவதாகவும் தொல் திருமாவளவன் கூறினார்.

Advertisement:
SHARE

Related posts

உலகிலேயே அதிகமான பழுதடைந்த விமானங்கள் எங்கு உள்ளது தெரியுமா?

Jeba Arul Robinson

இந்த தேர்தல் திராவிடத்தை காப்பாற்றும் போர் – மு.க.ஸ்டாலின்

Gayathri Venkatesan

மனைவி விருப்பமின்றி பாலியல் உறவு கொண்டால் விவாகரத்து கோரலாம்: கேரள உயர் நீதிமன்றம்

Gayathri Venkatesan