முக்கியச் செய்திகள் தமிழகம்

பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம்: மருத்துவமனையில் அனுமதி

கடலூர் மாவட்டம், திருச்சோபுரம் அருகே, பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதையடுத்து, அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

பூதக்கட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில், 20 குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று பகலில், அங்கன்வாடியில் சமைத்து பரிமாறப்பட்ட உணவை சாப்பிட்ட 3 குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த அங்கன்வாடி ஊழியர்கள், உணவை ஆய்வு செய்தபோது, அதில் பல்லி ஒன்று இறந்து கிடந்தது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அங்கன்வாடி மைய ஊழியர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் உணவு சாப்பிட்ட 17 குழந்தைகளை சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர், அங்கன்வாடி பணியாளர் ஜெயசித்ரா மற்றும் உணவு சமைத்த அம்சவல்லி ஆகியோரை பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.

Advertisement:
SHARE

Related posts

அழகர் ஆற்றில் இறங்க அனுமதியில்லை:மதுரை உயர் நீதிமன்றம்!

எல்.ரேணுகாதேவி

100 குழந்தைகளுக்கு பெற்றோராக துடிக்கும் ரஷ்ய தம்பதி!

Jeba Arul Robinson

வங்கதேசம் சென்றடைந்தார் பிரதமர் மோடி!

எல்.ரேணுகாதேவி