எவ்வளவு முடியுமோ அவ்வளவு போராடினோம், ஆனா..? தோல்வி பற்றி விராத்

இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் கடுமையான அழுத்தத்தை கொடுத்ததால், சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலி தெரிவித்தார். இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும்…

இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் கடுமையான அழுத்தத்தை கொடுத்ததால், சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலி தெரிவித்தார்.

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 76 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதையடுத்து 5 போட்டிகள் டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சம அளவில் உள்ளது. நான்காவது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் செப்டம்பர் 2ஆம் தேதி தொடங்க இருக்கிறது.

இந்நிலையில், போட்டிக்குப் பிறகு இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி கூறியதாவது:
முதல் இன்னிங்ஸில் 80 ரன்களுக்குள் ஆட்டமிழந்தது அழுத்தத்தைக் கொடுத்தது. பிறகு இங்கிலாந்து அணி பெரிய ஸ்கோரை எட்டியது. ஆனால், நேற்றைய ஆட்டத்தில் நாங்கள் சிறப்பாகவே செயல்பட்டோம். எவ்வளவு முடியுமோ அந்தளவுக்கு போராடினோம். ஆனால், இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் கடுமையான அழுத்தத்தை எங்களுக்கு கொடுத்தார்கள். நாங்கள் இன்று சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.

டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை எடுத்தது தவறில்லை. ஆடுகளம் பேட்டிங்குக்கு சாதக மாகத் தென்பட்டது. முதல்வரிசை பேட்ஸ்மேன்கள் அதிக ரன்கள் எடுத்தால்தான் நடு வரிசை வீரர்கள் இன்னும் அதிக ரன்கள் குவிக்க முடியும். அதில், நாங்கள் சரியான முடிவு களை எடுக்கவில்லை. அடுத்த டெஸ்டில் பிட்ச்சின் தன்மைக்கு ஏற்ப அணியைத் தேர்வு செய்வோம். இவ்வாறு விராத் கோலி கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.