புதிய வேளாண் கல்லூரிகள் அமைத்தல் உள்ளிட்ட வேளாண் துறை சார்ந்த முக்கிய அறி விப்புகளை சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட் டார்.
ஆதிதிராவிட பழங்குடியின விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் ஆழ்துளை அல்லது குழாய் கிணறுகள் அமைத்துத் தரப்படும் என அவர் அறிவித்தார். பெண் விவசாயிகள் காளான் வளர்ப்பில் ஈடுபட்டு அதிக அளவில் லாபம் ஈட்டவும், தினசரி வருமானம் பெற ஏதுவாக காளான் உற்பத்திக் கூடம் அமைக்க மானியம் வழங்கப்படும் எனக்கூறிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், கரூர், நாகை மற்றும் சிவகங்கை ஆகிய மூன்று மாவட்டங்களில் 30 கோடி ரூபாய் மதிப்பில் அரசு வேளாண் கல்லூரிகள் தொடங்கப் படும் என அறிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நிலம் இல்லாத 4077 விவசாயத் தொழிலாளர்களுக்கு 3 கோடியே 40 லட்சம் ரூபாய் செலவில் அரசு தோட்டக்கலை பண்ணைகளில் தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்படும் என்றும், வெற்றிலை சாகுபடியினை ஊக்குவிக்க ஹெக்டேருக்கு 10 ஆயிரம் வீதம் 100 பேருக்கு 10 லட்சம் ரூபாய் பின்னேற்பு மானியமாக விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்றும் வேளாண் துறை அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொலையுணர்வு தொழில்நுட்பம் மூலம் இயற்கை வளங்களை ஆராய்ந்து பயிர், மண் மற்றும் நீர் குறித்த தகவல்கள் கணினி மயமாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் விதை உற்பத்தி திறனை அதிகரிக்க உட்கட்டமைப்பு வசதிகள் 1 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும் என்றும், தரிசு நில தோட்டக்கலை சாகுபடியில் சிறந்த விவசாயிகளுக்கு மாவட்ட அளவில் விருதுகள் வழங்கப்படும் என்றும், அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.