வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப்பெறும் என்பதில் நம்பிக்கை இல்லை என திமுக நாடாளுமன்ற குழுத்தலைவர் டி.ஆர். பாலு தெரிவித்தார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது தொடர்பாக வீடியோ கான்பரன்சிங் மூலம் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைப்பெற்றது. அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த, நாடாளுமன்ற திமுக குழுத்தலைவர் டி.ஆர்.பாலு, விரைவாக கொரோனா தடுப்பு மருந்தை நடைமுறைக்கு கொண்டு வந்த பிரதமருக்கு, ஸ்டாலின் பாராட்டு தெரிவித்ததாக கூறினார்.

மேலும் இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் விவகாரத்தில் நேரடியாக தலையிட்டு பிரச்சினைக்கு தீர்வு காண பிரதமரை வலியுறுத்தியதாகவும் டி.ஆர்.பாலு கூறினார். வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப்பெறும் என்பதில் நம்பிக்கை இல்லை என தெரிவித்த டி.ஆர்.பாலு, கடந்த முறை, அனைத்துக்கட்சி கூட்டத்தில் இந்தியில் பேசியவர்கள், தற்போதும் இந்தியிலேயே பேசினார்கள் என வேதனை தெரிவித்தார்.







