தங்கம் விலை தினந்தோறும் புது புது ஆச்சரியங்களை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் தங்கம் விலை நேற்று கிராமுக்கு ரூ.150 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.13,700-க்கும், சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,09,600-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்று தங்கம் விலையில் மாற்றம் இல்லை. அதன் படி சென்னையில் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.13,700-க்கும் ஒரு சவரன் ரூ.1,09,600-க்கும் என நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தை போலவே வெள்ளி விலையும் மாற்றமின்றி நேற்றைய விலையிலேயே தொடர்கிறது. அதன் படி ஒரு கிராம் வெள்ளி ரூ.260-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.




