இந்தியாவின் பிரதிநிதியாக இலங்கை சென்றார் அண்ணாமலை- வி.பி. துரைசாமி

வெளியுறவுத்துறை பிரதிநிதியாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இலங்கை சென்றதாக அக்கட்சியின் மாநில துணை தலைவர் வி.பி. துரைசாமி தெரிவித்துள்ளார்.  சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகமாக கமலாலயத்தில் அக்கட்சியின்…

வெளியுறவுத்துறை பிரதிநிதியாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இலங்கை சென்றதாக அக்கட்சியின் மாநில துணை தலைவர் வி.பி. துரைசாமி தெரிவித்துள்ளார். 

சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகமாக கமலாலயத்தில் அக்கட்சியின் மாநில துணைத்தலைவர் வி.பி. துரைசாமி நியூஸ் 7 தமிழுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், சமீபத்தில் இலங்கை பயணம் மேற்கொண்ட மாநில பாஜக தலைவர் அண்ணாமலை வெளியுறவுத்துறை அமைச்சரின்  பிரதிநிதியாக இலங்கையில் தங்கியிருந்து தமிழின பிரதிநிதிகள், இலங்கை அரசு அதிகாரிகளை சந்தித்தாக கூறினார்.

மேலும், கச்சத்தீவு அந்தோணியார் கோயிலில் தமிழக மீனவர்கள் வழிபட அனுமதி பெற்றுத் தருவதற்காக அவர் மேற்கொண்ட இந்த பயணம் மீனவர்கள் மகிழ்ச்சியடையும் வகையில் அமைந்துள்ளதாகவும், வெளியுறவுத்துறை அமைச்சரிடம் இலங்கைப் பயணம் குறித்து விரிவாக எடுத்துரைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசி அவர், மீனவர்கள் எந்தவித இடையூறுமின்றி தொழில் செய்ய பிரதமர் மோடி நடவடிக்கை எடுப்பார் எனவும், இலங்கை மீனவர் சங்கங்களின் தலைவர்களின் கருத்துகளை பேச்சுவார்த்தை மூலமாக பேசி, நமக்கு எது வேண்டுமோ அதை பெற்றுத்தரும் முயற்சியில் அண்ணாமலை ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

1974 இல் தாரை வார்க்கப்பட்ட கச்சத்தீவு பிரச்சனைக்கு முடிவு கட்டும் வகையில்தான் வெளியுறவுத்துறை அமைச்சரால் அண்ணாமலை அனுப்பட்டிருந்தார். கச்சத்தீவை பெறுவதற்கான கால நேரம் நிர்ணயம் செய்யப்படவில்லை எனவும், அதற்கான பேச்சுவார்த்தை தொடங்கிவிட்டதாகவும், அதில் நிச்சயம் பலன் கிடைக்கும் எனவும் தெரிவித்தார்.

திமுகவும், காங்கிரசும் ஆட்சி செய்தபோது கச்சத் தீவு பிரச்னை தொடர்பாக சிறு துரும்பு கூட எடுத்துப்போடவில்லை. எங்கெங்கெல்லாம் தமிழர்கள் இடையூறுக்கு உள்ளாகிறார்களோ, அப்போது சிறப்பு கவனம் செலுத்தி உதவ பிரதமர் மோடி நடவடிக்கை எடுத்துவருவதாகவும் அவர் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.