மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பு 1,20,000 கன அடியிலிருந்து 1,30,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில் நாட்களாக கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, காவிரி ஆற்றில் அதிக அளவு நீர் திறந்துவிடப்படுகிறது. இதனால் கர்நாடகாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு வரும் நீரின் அளவு உயர்ந்து மேட்டூர் அணையின் நீர்மட்டம் கடந்த சில தினங்களுக்கு முன்பு முழுக் கொள்ளளவை எட்டியது. இன்று மாலை 4 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120.06 அடியாக உள்ளது. அணையில் நீர் இருப்பு 93.56 டி.எம்.சியாக உள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அணைக்கான நீர்வரத்து 1,20,000 கன அடியிலிருந்து 1,21,000 கன அடியாக உயர்ந்துள்ள நிலையில், அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவும் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 5.30 மணி நிலவரப்படி அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 1,20,000 கன அடியிலிருந்து 1,30,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணை மின் நிலையம், சுரங்க மின் நிலையம் மூலம் 23,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில், 16 கண் பாலம் வழியாக 1,07,000 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையிலிருந்து கூடுதலாக 10 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்படும் நிலையில் கரையோரம் உள்ள பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.