வாஷிங்டன் சுந்தர் அபார ஆட்டம் : ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3வது டி20யில் இந்தியா அசத்தல் வெற்றி!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றவது டி20 போட்டியில் வாஷிங்டன் சுந்தரின் அதிரடி ஆட்டத்தால் இந்தியா வெற்றியடைந்துள்ளது.

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 2-1 என்ற அடிப்படையில் ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா கைப்பற்றிய நிலையில் டி20 போட்டிகள் துவங்கியுள்ளன.

அதன் படி இரு அணிகளுக்கும் இடையிலான 3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று ஹோபர்ட்டில் நடந்தது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி  பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி  டிம் டேவிட் மற்றும் ஸ்டாய்னிஸ் ஆகியோரின் அதிரடியால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்தது.

இதனை தொடர்ந்து 187 என்ற கடினமான இலக்கை விரட்டிய இந்திய அணி 18.3 ஓவர்களில் இலக்கை அடைந்து வெற்றியை தன் வசப்படுத்தியது. இந்திய அணியில் சார்பில் அதிரடியாக ஆடிய  தமிழகத்தை சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் 23 பந்துகளில் 49 ரன்களை விளாசி அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

மேலும் திலக் வர்மா 29 ரன்களும் அபிஷேக சர்மா 24 ரன்களும் அடித்து இலக்கை அடைய உதவினர்.  ஆஸ்திரேலிய அணி சார்பில் வேகபந்து வீச்சாளர் நாதன் எல்லீஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.  இந்த வெற்றி மூலம்  தொடரில் இரு அணிகளும்  1-1 என்று சம நிலையில் உள்ளன.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.