பென்னாகரம் அருகே சாலை தரமாக இல்லை என புகார் அளித்த வார்டு மெம்பருக்கு, அரிவாளுடன் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள கூத்தப்பாடியைச் சேர்ந்தவர் புகழேந்தி. இவர் இந்த பகுதி ஊராட்சி வார்டு மெம்பராக உள்ளார். இவர் தங்கள் ஊரில் சமீபத்தில் போடப்பட்ட தார் சாலை தரமாக இல்லை எனக் கூறி நேற்று (செப்டம்பர் -18ம் தேதி) பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த தார் சாலையை பென்னாகரம் பகுதியைச் சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர் அருள்மொழி என்பவர் ஒப்பந்தம் எடுத்து தார் சாலை அமைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, ஒன்றிய கவுன்சிலர் அருள்மொழி என்பவர் செய்த பணி சரியில்லை என வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் அளித்த வார்டு மெம்பரை அவரின் ஆதரவாளர்கள் அரிவாளுடன், வீடு தேடி சென்று, கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதையும் படியுங்கள் : MBBS, BDS படிப்புகளுக்கு 2ம் கட்ட கலந்தாய்வு கால அவகாசம் நீட்டிப்பு!
இதையடுத்து, வார்டு மெம்பருக்கு அருள்மொழியின் ஆதரவாளர்கள் கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியானது. இந்த சம்பவம் பென்னாகரம் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.







