இத்தனை பிரச்சனைகளுக்கு மத்தியில் மது வேண்டுமா?

மதுக் குடிக்கும் ஒருவரிடம் கேட்டால், நான் வலியை மறக்கக் குடிக்கிறேன், துக்கத்தை மறக்கக் குடிக்கிறேன் என்பார். ஆனால், இந்த மது அவர் ஒருவருக்குமான பாதிப்பை ஏற்படுத்துமா என்றால், மனரீதியான சமூக ரீதியான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்…

மதுக் குடிக்கும் ஒருவரிடம் கேட்டால், நான் வலியை மறக்கக் குடிக்கிறேன், துக்கத்தை மறக்கக் குடிக்கிறேன் என்பார். ஆனால், இந்த மது அவர் ஒருவருக்குமான பாதிப்பை ஏற்படுத்துமா என்றால், மனரீதியான சமூக ரீதியான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என மனநல ஆலோசகர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒருவர் தொடர்ந்து மது குடிப்பதனால், என்னென்ன பிரச்சனைகளைச் சந்திக்க வாய்ப்புள்ளது:

  • ஒருவர் தொடர்ந்து மது குடிப்பதனால், கல்லீரல் பாதிக்கப்பட்டு கல்லீரல் இறுக்க நோய் ஏற்படுவதாகவும், அது படிப்படியாகக் கல்லீரல் புற்று நோயாக உருவாகுவதற்குக் காரணமாக அமைவதாகவும் கூறப்படுகிறது.
  • ஒருவர் தொடர்ந்து மது குடிப்பதனால், குடல் பாதிக்கப்பட்டு இரைப்பை சுழற்சி ஏற்பட்டு குடலில் புண் உருவாகும் அபாயம் உள்ளதாகக் கூறப்படுகிறது.
  • ஒருவர் தொடர்ந்து மது குடிப்பதனால், வாய், தொண்டை, உணவுக் குழாய்களில் புற்றுநோய் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.
  • ஒருவர் தொடர்ந்து மது குடிப்பதனால், தோளிலும், காலிலும் தசை நார் இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.
  • ஒருவர் தொடர்ந்து மது குடிப்பதனால், கோர்ஸா காஃப்ஸ் சின்ட்ரோம் எனும் மூளை பாதிப்பு நோய் உருவாகும் அபாயம் உள்ளதாகக் கூறப்படுகிறது.

  • ஒருவர் தொடர்ந்து மது குடிப்பதனால், உயிர்ச்சத்து `பி’ குறைந்து, வெர்னிக் சின்ட்ரோம் என்ற நோய் ஏற்பட்டு நடக்க முடியாமல் போகும் அபாயம் உள்ளதாகக் கூறப்படுகிறது.
  • ஒருவர் தொடர்ந்து மது குடிப்பதனால், உடலின் நோய் எதிர்ப்புத் தன்மை குறைந்து, தொற்று நோய்கள் வரும்போது அதனை எதிர்கொள்ள முடியாத நிலை உண்டாகும் வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.
  • ஒருவர் தொடர்ந்து மது குடிப்பதனால், மனரீதியான பல்வேறு சிக்கல்களைச் சந்திக்க நேரிடுவதாகக் கூறப்படுகிறது. இப்படித் தொடர்ந்து மதுக் குடிக்கும் ஒருவரை, குணமாக்க உளவியல் ரீதியாக அணுகி அவரை அந்த மதுவிலிருந்து குணமாக்க வேண்டியது அவசியம்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.