கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று மீண்டும் வேகமாகப் பரவி வருகிறது. தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில், அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் விழிப்புணர்வுகளையும் மேற்கொண்டு வருகிறது. பொதுமக்கள் முகக்கவசம் அணியவும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கவும் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.
புதுச்சேரியில் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து, முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைபிடிப்பது இன்று முதல் மீண்டும் கட்டாயமாக்கப்படுகின்றது. அரசு ஊழியர்கள் மற்றும் பொதுத் துறை, வணிக நிறுவனங்களில் பணிபுரிவோர் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தியிருப்பதை சுகாதாரத் துறை உறுதி செய்ய புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும், புதுச்சேரியில் தீவிரமாக பரவும் கொரோனாவைக் கட்டுப்படுத்த அனைத்து துறைகளும் கண்காணிக்க தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
-ம.பவித்ரா







