வேண்டும் மீண்டும் அரிக் கொம்பன் : கேரள பழங்குடியின மக்கள் போராட்டம்

அரிக் கொம்பன் யானையை கேரள வனப்பகுதிக்கு கொண்டு வர வேண்டும் என கூறி சின்னக்காணல் பஞ்சாயத்து ஆதிவாசி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த சில நாட்களாக தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே மேகமலை, மணலாறு,…

அரிக் கொம்பன் யானையை கேரள வனப்பகுதிக்கு கொண்டு வர வேண்டும் என கூறி சின்னக்காணல் பஞ்சாயத்து ஆதிவாசி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த சில நாட்களாக தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே மேகமலை, மணலாறு, இரவங்களாறு உள்ளிட்ட பகுதியில் அரிக்கொம்பன் யானை சுற்றி திரிந்து மக்களை அச்சத்தில் ஆழ்த்தியது.

இந்நிலையில் ரேடியோ காலர் சிக்னல் படி தேனி மாவட்டம் லோயர் கேம்ப் பவர் ஹவுஸ் வனப்பகுதியில் அரிக்கொம்பன் இருப்பதாக தகவல் கிடைத்தது. மேலும் குமுளி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையை அரிக்கொம்பன் யானை கடந்து சென்றுள்ள சிக்னல் பதிவாகியுள்ளதாக தகவலம் கிடைத்தது.

இதனிடையே கடந்த மே 27-ம் தேதி கம்பம் நகர் பகுதிக்குள் காலை திடீரென புகுந்த யானை, வாகனங்களை சேதப்படுத்தியும், பொதுமக்களை அச்சுறுத்தியும் வந்தது. பொதுமக்களின் பாதுகாப்பிற்காக கம்பம் நகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மேலும் இருசக்கர வாகனத்தில் சென்ற கம்பம் நகரை சேர்ந்த பால்ராஜ் என்பவர் அரிக்கொம்பன் யானை இடித்ததில் படுகாயம் அடைந்து மருத்தவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ராயன்பட்டி அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள சண்முகா நதி அணை பகுதியில் கடந்த சில தினங்களாக  முகாமிட்டு இருந்த அரிக்கொம்பன் யானையை மயக்க ஊசி செலுத்தி கும்கி யானைகள் உதவியுடன் வனத்துறையினர் பிடித்தனர். இதனையடுத்து திருநெல்வேலி மாவட்டம் அகத்தியமலை யானைகள் காப்பக வனப்பகுதியான முத்துக்குளி என்ற பகுதியில் அரிக்கொம்பன் யானை விட திட்டமிடப்பட்டுள்ளது.

இதனிடையே அரிக் கொம்பன் யானையை கேரள வனப்பகுதிக்கு கொண்டு வர வேண்டும் என சின்னக்காணல் பஞ்சாயத்து ஆதிவாசி மக்கள் வலியுறுத்தியுள்ளனர் . அரிக் கொம்பன் யானையை கேரளா வனத்துறை அமைச்சர் தமிழ்நாட்டுக்கு விற்று விட்டதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அரிக்கொம்பன் யானை வராவிட்டால் தேர்தலை புறக்கணிப்போம் என தெரிவித்து அவர்கள் போராட்டத்தில் நடத்தினர்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.