சசிகலா குணம் அடைய வேண்டி தஞ்சாவூர் அருகே அமமுகவினர் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்தனர்.
பெங்களூரு பரப்பன அக்ரகார சிறையில் இருந்த சசிக்கலா உடல்நலக் குறைவு காரணமாக பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் பூரண குணமடைந்து திரும்ப வேண்டுமென தஞ்சையில் அமமுக வினர் சார்பில் ஆத்துப்பாலம் அருகே உள்ள முனியாண்டார் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கீழவாசல் பகுதி அவைத்தலைவர் பன்னீர்செல்வம் தலைமையில் இந்த சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சசிகலா பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என வேண்டி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதனை நடைபெற்றது.
இதில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொருளாளர் ரெங்கசாமி, செந்தில் பல்லவராயர், ராஜேஷ்வரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.







