ஜூன் மாதம் புதிய தலைவர்: காங்கிரஸ் காரிய கமிட்டியில் முடிவு!

காங்கிரஸ் புதிய தலைவருக்கான தேர்தல் வரும் ஜூன் மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2019 மக்களவைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். இதனால்…

காங்கிரஸ் புதிய தலைவருக்கான தேர்தல் வரும் ஜூன் மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2019 மக்களவைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். இதனால் அந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் காங்கிரஸ் இடைக்கால தலைவராக நியமிக்கப்பட்ட சோனியா காந்தி, தற்போது வரை பொறுப்பில் நீடித்து வருகிறார்.

கட்சிக்கு முழு நேர தலைவரை நியமிக்க வேண்டும், கட்சியை மறுசீரமைப்பு செய்ய வேண்டுமென 23 மூத்த தலைவர்கள் சோனியாவுக்கு கடிதம் எழுதினர். இதனையடுத்து, மதுசூதனன் மிஸ்திரி தலைமையில் 5 பேர் கொண்ட தேர்தல் குழு அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் அக்கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் இன்று இணைய வழியாக நடைபெற்றது. அதில், தலைவர் தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டது.

குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா, சிதம்பரம், முகுல் வாஸ்னிக் உள்ளிட்ட மூத்த தலைவர்கள், உடனடியாக அமைப்புத் தேர்தலை நடத்தக் கோரியதாகக் கூறப்படுகிறது. ஆனால் ஏ.கே.அந்தோனி, அசோக் கெலாட், அமரீந்தர் சிங், தாரிக் அன்வர், உம்மன் சாண்டி ஆகியோர் 5 மாநிலத் தேர்தல்களுக்குப் பிறகு தலைவர் தேர்தலை நடத்தலாம் எனக் கூறியுள்ளனர்.

கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், வரும் ஜூன் மாதம் காங்கிரஸின் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க காரிய கமிட்டி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply