சுயவிருப்பத்தின் பேரில் பாலியல் தொழிலில் ஈடுபடுவது சட்டவிரோதமானது அல்ல என்று உச்சநீதிமன்றம் நியமித்த குழு பரிந்துரைகளை வழங்கியுள்ளது.
அதேநேரம், பிராத்தலை நடத்துவதும் கட்டாயப்படுத்தி பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதும் சட்டவிரோதம் என்றும் அந்தக் குழு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக உச்சநீதிமன்றம் நியமித்த குழு, பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கியது. ரெய்டு நடத்தும்போது சுயவிருப்பத்தின் பேரில் பாலியல் தொழிலில் பெண்கள் ஈடுபட்டிருப்பது கண்டறியப்பட்டால், அதை சட்டவிரோதமானதாகக் கருதி கைது செய்தல், தண்டனை விதித்தல், துன்புறுத்துதல் ஆகியவற்றை செய்யக் கூடாது என்றும் அந்தக் குழு அளித்த பரிந்துரைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனித கண்ணியம் மற்றும் கண்ணியத்தின் இந்த அடிப்படைப் பாதுகாப்பு பாலியல் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளுக்கு நீட்டிக்கப்படுகிறது.
கண்ணியத்துடன் வாழும் உரிமை அவர்களுக்கு பறிக்கப்படுகிறது என்பதைச் சொல்லத் தேவையில்லை என்று கூறிய உச்சநீதிமன்றம், “எந்தத் தொழிலாக இருந்தாலும், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 21வது பிரிவின்படி, இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு தனிநபருக்கும் கண்ணியமான வாழ்க்கைக்கு உரிமை உண்டு” என்று தெரிவித்தது. மேலும், இந்தப் பரிந்துரைகள் தொடர்பாக 6 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதுதொடர்பான அடுத்தகட்ட விசாரணையை ஜூலை 27ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.








