2ஆம் கட்ட சுற்றுப்பயணமாக தஞ்சை புறப்பட்ட வி.கே.சசிகலா, செங்கல்பட்டு மற்றும் மேல்மருவத்தூரில் சாமி தரிசனம் செய்தார்.
முதற்கட்டமாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பல்வேறு கோயில்களில் சாமி தரிசனம் செய்தார் சசிகலா. அப்போது, அவருக்கு ஏராளமான தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்நிலையில், சென்னை தியாகராய நகர் இல்லத்தில் இருந்து 2ஆம் கட்ட சுற்றுப்பயணமாக இன்று தஞ்சாவூர் புறப்பட்டார். சாலை மார்க்கமாக பயணம் மேற்கொண்டுள்ள சசிகலா, செல்லும் வழியில் உள்ள பல்வேறு கோயில்களில் சாமி தரிசனம் செய்யவும், ஆதரவாளர்களை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், சாலை மார்க்கமாக பயணம் மேற்கொண்டு வரும் சசிகலா, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் உள்ள ஏரி காத்த ராமர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பின்பு கோ பூஜையில் கலந்துகொண்டு பசுவிற்கு பழங்களை வழங்கினார். இதனை தொடர்ந்து மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலில் சிறப்பு தரிசனம் செய்து பின்பு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். அப்போது, சசிகலாவுக்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.