விஷ்ணு விஷாலின் “FIR” படத்துக்கு தடை ?

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாக உள்ள FIR படத்தை தமிழகத்தில் தடை செய்ய வேண்டுமென்று இந்திய தேசிய கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.   இயக்குநர் ஆனந்த் இயக்கத்தில் , விஷ்ணு விஷால்…

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாக உள்ள FIR படத்தை தமிழகத்தில் தடை செய்ய வேண்டுமென்று இந்திய தேசிய கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

 

இயக்குநர் ஆனந்த் இயக்கத்தில் , விஷ்ணு விஷால் நடிப்பில் FIR என்ற படம் தயாராகியுள்ளது. உதயநிதி ஸ்டாலின் இந்த படத்தை தயாரித்திருக்கிறார். படம் நாளை வெளியாக உள்ள நிலையில் படத்தினை தடைசெய்யக் கோரி இந்திய தேசிய கட்சியினர் சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

 

முழுக்க முழுக்க இஸ்லாமியர்களை தீவிரவாதிகள் போல காட்சி படுதியிருப்பதாக தகவல் கிடைத்ததன் அடிப்படையில் இந்த மனுவை கொடுத்திருப்பதாக அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர். கடந்த முறை துப்பாக்கி படம்கூட இஸ்லாமியர்களை கொச்சை படுத்தும் வகையிலும், தீவிரவாதத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையிலும் இருந்தது. அதே போல இந்த படத்தையும், இஸ்லாமியர்கள் தீவிரவாதிகளை ஆதரிப்பது போல உருவாக்கப்பட்டு உள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது.

 

மேலும் தணிக்கை துறையில் கூட ஊழல் இருக்கிறது, கதை மற்றும் காட்சிகளை வெளியிட பணம் வாங்கிகொண்டு ஆதரவு அளிக்கிறார்கள் . நாளை நீதிமன்றத்தில் இது சம்பந்தமாக வழக்கு தொடர உள்ளோம், திரையரங்குகளை முற்றுகை செய்ய போகிறோம். இந்த படத்தை உதயநிதி ஸ்டாலின் தயாரித்திருப்பது வருத்தமளிக்கிறது என்று இந்திய தேசிய லீக் கட்சி தலைவர் தடா ரஹீம் தனது பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.