அதிரடியாக குறையத் தொடங்கிய கொரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,588 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா மூன்றாம் அலை பரவத் தொடங்கி நாடு முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வந்த நிலையில், கடந்த…

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,588 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா மூன்றாம் அலை பரவத் தொடங்கி நாடு முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வந்த நிலையில், கடந்த சில தினங்களாக பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைந்துவருகிறது. இந்த நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 3,588 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 34,28,068 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த 25 பேர் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்துள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 37,862 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றிலிருந்து 14,182 பேர் குணமடைந்தனர். இதுவரை நலம்பெற்றவர்களின் எண்ணிக்கை 33,23,214 ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் தற்போது 66,992 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதிகபட்சமாக தலைநகர் சென்னையில் இன்று 8,955 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மற்ற மாவட்டங்களைப் பொறுத்தவரை அதிகபட்சமாக கோவையில் 8,747 பேருக்கும், செங்கல்பட்டில் 5726 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.