அமெரிக்காவில், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் இந்திய தொழிலதிபர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் விசாக்களை ரத்து செய்வதாக டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள செய்தியில்,
”அமெரிக்காவிற்குள் ஃபெண்டானில் போன்ற போதைப்பொருட்களின் பயன்பாட்டை தடுப்பது எங்கள் மிக உயர்ந்த முன்னுரிமைகளில் ஒன்றாகும்.போதைப்பொருள் கடத்தலில் சட்டவிரோதமாக ஈடுபட்ட நிறுவனத்தின் நிர்வாகிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கான விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கடத்தல் அச்சுறுத்தலை எதிர்கொள்ள தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கிய இந்திய அரசுக்கு நன்றி’’
என்று தெரிவித்துள்ளது.
இந்த செய்தி குறிப்பில் யாருடைய பெயரும் குறிப்பிடப்படவில்லை.







