சட்டவிரோதமாக நாட்டு துப்பாக்கி வைத்திருந்த இருவர் கைது!

திருவண்ணாமலையில் சட்டவிரோதமாக நாட்டு துப்பாக்கி வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தாலுகா ஆதமங்கலம் புதூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட நவாப்பாளையம் கிராமத்தில் இரண்டு வெவ்வேறு நபர்கள் தங்களது வீட்டில் அனுமதியின்றி ஒற்றைக் குழல் நாட்டு துப்பாக்கி வைத்திருப்பதாக காவல் துறையினருக்கு தகவில் கிடத்தது. இதனை தொடர்ந்து பேரில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையில்  சிவாஜி (44) மற்றும் காமராஜ் (44)  ஆகிய இருவரிடம் இருந்து ஒற்றைக் குழல் நாட்டு துப்பாக்கி இரண்டை காவல்துறையினர் கைப்பற்றினர்.
அந்த துப்பாக்கியில் மருந்துகள் நிரப்பப்பட்டு வெடிப்பதற்கு தயார் நிலையில்
இருந்துள்ளது.

இதனை தொடர்ந்து இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து  முதற்கட்ட விசாரணையில் அந்த  இரண்டு நபர்களும் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக ஜமுனாமுத்தூர் அமட்டன் கொட்டய் கிராமத்தில் துப்பாக்கிகளை வாங்கியதாக தெரிவித்துள்ளனர்.

மேலும்அவர்களிடம் இருந்த சிறிய ரக பால்ரஸ் குண்டுகள் நைட்ரஜன் சிறிய ரக ஈயம் குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.