க்யூட்டாக சண்டையிடும் குட்டி யானைகள்; இணையத்தில் வைரலாகும் வீடியோ!

அடர்ந்த வனப்பகுதியில் இரண்டு குட்டியாகளைகள் செல்லமாக சண்டையிட்டு விளையாடும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. யானைகள் பார்ப்பதற்குப் பயமாக இருந்தாலும், அதன் செயல்கள் இனிமையாக இருக்கும், அதிலும் குறிப்பாக யானைக்குட்டிகள் செய்யும் குறும்புத்தனங்கள்…

அடர்ந்த வனப்பகுதியில் இரண்டு குட்டியாகளைகள் செல்லமாக சண்டையிட்டு விளையாடும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

யானைகள் பார்ப்பதற்குப் பயமாக இருந்தாலும், அதன் செயல்கள் இனிமையாக இருக்கும், அதிலும் குறிப்பாக யானைக்குட்டிகள் செய்யும் குறும்புத்தனங்கள் பார்ப்பதற்கு ரசிக்கும்படியாக இருக்கும். அதுபோல இங்கு ஒரு குட்டியானை செய்யும் செயல் ஒன்று இணையத்தில் வேகமாகப் பரவி பலரையும் ரசிக்க வைத்துள்ளது.

ஒரு குட்டி யானை ஒன்று அதைவிட கொஞ்சம் பெரிய மற்றொரு யானையுடன் செல்லமாக சண்டையிட்டு விளையாடும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்ப்பதற்கு அண்ணன், தம்பி சண்டையிடுவது போன்று உள்ளது.

https://twitter.com/ParveenKaswan/status/1650840527724756993

முதலில் குட்டி யானை முறைக்கும் போது, மற்றொரு யானை பின்வாங்குவதும், மற்றொரு யானை முறைத்து கொண்டே பின்னாடி தள்ளும் போது குட்டி யானையின் தாய் யானை வருகிறது. அழகிய வனத்தில் யானைக்குட்டிகள் செல்லமாக சண்டையிட்டு விளையாடும் இந்த காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.