முக்கியச் செய்திகள் சினிமா

விருமன் படத்தின் ட்ரைலர் வெளியீடு!

நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள விருமன் திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா இன்று மதுரையில் நடந்தது. 

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி, அதிதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் விருமன். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். எஸ்.கே.செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்தை நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து தயாரித்துள்ளனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

நடிகர் சூர்யா தயாரிப்பில் அவரின் தம்பி கார்த்தி மற்றும் அதிதி நடிப்பில் உருவாகியுள்ள விருமன் திரைப்படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று மதுரையில் நடைபெற்றது. இதில் நடிகர் கார்த்தி, சூர்யா, இயக்குனர் பாரதிராஜா, நடிகர் கருணாஸ், சூரி, இயக்குனர் ஷங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மண்சார்ந்து உருவாகியுள்ள விருமன் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 12ம் தேதி திரைக்கு வரும் என படக்குழுவினர் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: வேட்பு மனுக்களை திரும்பப் பெற கடைசி நாள்

G SaravanaKumar

டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல்: 3 விக்கெட்டுகளை இழந்தது இந்திய அணி

Gayathri Venkatesan

கறுப்பின அமெரிக்க ராணுவ மருத்துவரை துப்பாக்கி முனையில் கைது செய்த காவலர்

Gayathri Venkatesan