முக்கியச் செய்திகள் தமிழகம்

‘தேவையற்ற விளம்பரங்களில் நடிகர்கள்; நாட்டுக்குச் செய்யும் துரோகம்’

ஜிஎஸ்டி வரி உயர்வுக்கு மற்றவர்கள் மீது பழி போட்டுத் தப்பித்துக் கொள்ளாமல், விலைவாசியைக் குறைக்க நியாயமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனைத் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரம ராஜா கேட்டுக்கொண்டுள்ளார்.

சென்னை கோயம்பேட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், 75வது சுதந்திர தின நிறைவு விழாவை முன்னிட்டு, நாடு முழுவதும் இல்லங்கள் மற்றும் கடைகளில் தேசியக் கொடியை ஏற்றி வைக்க வேண்டும் என மத்திய மாநில அரசுகள் வலியுறுத்தி இருக்கின்றன. அதை ஏற்று வணிக கடைகளிலும் இல்லங்களிலும் தேசியக் கொடி ஏற்றி வைக்கப்படும் எனக் கூறினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மேலும், இளைய தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் ஸ்டார்ட் அப் தமிழ்நாடு எனும் திட்டத்தை அரசு தொடங்கியுள்ளது. அதை மனதார வரவேற்பதாகக் கூறிய அவர், 47வது ஜிஎஸ்டி கூட்டத்தில், பால், தயிர் போன்ற அத்தியாவசிய பொருட்கள் மீது ஜிஎஸ்டி வரியை 5 சதவீதம் ஏற்றப்பட்டுள்ளது. இதைக் கண்டித்துப் பல போராட்டங்களை நடத்தி வருவதாகக் கூறினார்.

மக்கள் தலையில் விலைவாசி உயர்வு விழக்கூடாது என்றால் ஜிஎஸ்டி வரி உயர்வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் எனவும் விலைவாசி உயர்வுக்கு வியாபாரிகளைக் குறை செல்வதை ஏற்க முடியாது, இதைக் கடுமையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்த அவர், விலைவாசி உயர்வுக்கு வணிகர்களைக் குற்றம் சொல்வதை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தவிர்க்க வேண்டும் எனவும் கூறினார். மேலும், 47வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 5 சதவீத வரி உயர்வை நடைமுறைப்படுத்தியிருப்பதைத் திரும்பப் பெறவில்லை என்றால், மதுரையில் நடைபெற இருக்கும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தன்று கடைகள் அடைக்கப்பட்டும், மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்தார்.

மின் கட்டணம் உயர்ந்துள்ள நிலையில், சிறு குறு தொழில் முனைவோர்களுக்கு மின் துறையில் பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளது போல் சிறு குறு துறையில் பதிவு செய்யப்பட்டுள்ள வியாபாரிகளுக்கும் சலுகைகள் அளிக்க வேண்டும் என எனத் தெரிவித்த அவர், கடுமையான விலைவாசி உயர்வை ஏற்படுத்தக் கூடிய மின்கட்டண உயர்வைக் குறைக்க வேண்டும் என வலியுறுத்துவதாகக் கூறினார். மேலும், சந்தைகளுக்குச் செல்லக்கூடிய பொருட்களுக்கு மட்டுமே அரசு செஸ் வரி வசூலிக்க வேண்டும் எனவும் சாலைகளில் வாகனங்களை நிறுத்தி செஸ் வரி வசூலிக்கக் கூடாது எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், இது தொடர்பாகத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து வலியுறுத்த இருப்பதாகக் கூறிய அவர், மற்றவர்கள் மீது பழி போட்டுவிட்டு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தப்பித்துக் கொள்ளக் கூடாது, விலைவாசி உயர்வைக் குறைக்க நியாயமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும், 47வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் போடப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரி உயர்வை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் எனத் தெரிவித்தார்.

லூலு சூப்பர் மார்க்கெட்டில் மளிகை பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது எனத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கவனத்திற்கு எடுத்துச் சென்றிருப்பதாகவும், சூப்பர் மார்க்கெட் வர்த்தகத்தால் சாமானிய வியாபாரிகள் எந்த அளவு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை ஆய்வு செய்து இருப்பதாகவும் அந்த அறிக்கையைத் தமிழ்நாடு முதலமைச்சருக்கு வழங்க இருப்பதாகக் கூறிய அவர், சாலையோர வியாபாரிகளிடம் ஒரு சிலர் லஞ்சம் பெறுவது தொடர்பாகச் சென்னை மாநகராட்சி ஆணையரிடம் புகார் மனு அளித்திருப்பதாகக் கூறினார்.

மேலும், சாலையோர வியாபாரிகளிடம் முறையான வாடகை கட்டணம் வசூலித்தால், அதன் மூலம் அரசுக்கு வருவாய் கிடைக்கும். லஞ்சம், மிரட்டல், ரவுடிசம் முழுமையாகக் குறைக்கப்படும் எனக் கூறிய அவர், சாலையோர வியாபாரிகளை மிரட்டி யாராவது லஞ்சம் பெறுவதாக தங்கள் கவனத்திற்குக் கொண்டுவந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தயாராக இருப்பதாகக் கூறினார்.

அண்மைச் செய்தி: ‘பதட்டத்தை ஏற்படுத்தியுள்ள அமெரிக்காவின் நாடாளுமன்ற சபாநாயகரின் தைவான் பயணம்’

தொடர்ந்து பேசிய அவர், ஆன்லைன் ரம்மி விளையாட்டை ஊக்கப்படுத்தும் விளம்பரங்களைத் தமிழ்நாடு அரசு கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பணம் கிடைக்கிறது என்ற காரணத்தால் தேவையற்ற விளம்பரங்களில் நடிகர்களும் விளையாட்டு வீரர்களும் நடித்தால் அது நாட்டுக்குச் செய்யும் துரோகம் எனக் குற்றம் சாட்டினார். மேலும், சோதனை செய்து பயன்படுத்தும் பொருட்கள் மட்டுமே அவர்கள் விளம்பரம் செய்ய வேண்டும் எனவும் கூறினார்.

உள்நாட்டுக் குளிர்பானங்களை ஊக்கப்படுத்தும் வகையில் அவற்றின் மீதுள்ள வரியை விலக்க வேண்டும் என மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தியிருந்ததாகத் தெரிவித்த அவர், இதுவரை அரசு செவி சாய்க்கவில்லை, அப்படி செவி சாய்த்தால், வெளி நாட்டுக் குளிர்பானங்கள் இல்லாத மாநிலமாகத் தமிழ்நாடு இருக்கும் என அவர் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

இணையத்தில் வைரலாகும் கிச்சானாலே இளிச்சவாயன் தானா சார்?

G SaravanaKumar

பள்ளி மாணவர்களுக்கு கவுன்சிலிங் – அமைச்சர்

EZHILARASAN D

நாமக்கல்லில் 2.70 டன் புகையிலை, குட்கா பறிமுதல்

Jeba Arul Robinson