ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசையில் விராட், ரோகித் சர்மா முன்னேற்றம்!

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசையில் விராட் கோலி ஆறாம் இடத்துக்கு முன்னேற்றியுள்ளார். 8வது இடத்தில் இந்திய அணி கேப்டன் ரோகித் ஷர்மா உள்ளார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஒரு நாள் போட்டி…

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசையில் விராட் கோலி ஆறாம் இடத்துக்கு முன்னேற்றியுள்ளார். 8வது இடத்தில் இந்திய அணி கேப்டன் ரோகித் ஷர்மா உள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஒரு நாள் போட்டி வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டது. இதன்படி பேட்ஸ்மேன் தரவரிசையில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் முதலிடத்திலும், தென்ஆப்பிரிக்காவின் வான்டெர் டஸன் 2-வது இடத்திலும், பாகிஸ்தானின் இமாம் உல்-ஹக் 3-வது இடத்திலும் உள்ளனர்.

இலங்கைக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் சதம் அடித்த இந்திய வீரர் விராட் கோலி 2 இடம் முன்னேறி 6-வது இடத்தை பிடித்துள்ளார். இதே ஆட்டத்தில் 83 ரன்கள் விளாசிய ரோகித் சர்மா ஒரு இடம் உயர்ந்து 8-வது இடத்தை பெற்றுள்ளார்.பந்து வீச்சாளர்களில் டாப்-10 இடத்தில் மாற்றமில்லை. நியூசிலாந்தின் டிரென்ட் பவுல்ட் முதலிடத்திலும், ஆஸ்திரேலியாவின் ஹேசில்வுட் 2-வது இடத்திலும் தொடருகிறார்கள். இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் 4 இடங்கள் அதிகரித்து 18-வது இடத்துக்கு வந்துள்ளார்.

டி20 போட்டி பேட்டிங் தரவரிசையில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் 908 புள்ளிகளுடன் கம்பீரமாக முதலிடத்தில் பயணிக்கிறார். டி20 போட்டிகளில் பேட்ஸ்மேன் வரிசையில் டாப்-10 இடத்திற்குள் உள்ள ஒரே இந்தியர் அவர் தான். டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் மார்னஸ் லபுஸ்சேன் ‘நம்பர் ஒன்’ ஆக வலம் வருகிறார். தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் 195 ரன்கள் குவித்த ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா 4 இடங்கள் ஏற்றம் கண்டு 8-வது இடத்தை பிடித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.