முக்கியச் செய்திகள் கட்டுரைகள்

இந்தியும் ஜொமேட்டோவும்..


சரவண குமார்

 

தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்பு போராட்டம் 1937ம் ஆண்டு தொடங்கியது. அப்போது சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த ராஜகோபாலாச்சாரி, சென்னை மாகாணப் பள்ளிகளில் கட்டாயமாக இந்தியை கற்பிக்க வேண்டும் என ஆணையிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 1937 தொடங்கிய போராட்டம் 1940 வரை நீடித்தது. போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் உண்ணாவிரதம், ஊர்வலம், மறியல் போராட்டம் போன்றவற்றை நடத்தி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். 1939ம் ஆண்டு ராஜகோபாலாச்சாரி பதவி விலகியதை அடுத்து மாநில ஆளுநராக பதவியேற்ற ஜான் எர்ஸ்கின் பிரபு, 1940ம் ஆண்டு கட்டாயமாக இந்தி கற்பிக்க வேண்டும் என்ற அறிவிப்பை திரும்பப் பெற்றார்.

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, இந்தி திணிப்பு மீண்டும் பல மாநிலங்களில் அதிகரிக்கத் தொடங்கியது. இந்த முறை இந்தி திணிப்பு போரட்டத்தை 1960களில் திமுக முன்னெடுத்து. அப்போது நடந்த போராட்டத்தில் பலர் உயிரிழந்தனர். அப்போது பிரதமராக இருந்த லால் பகதூர் சாஸ்திரி, இந்தி அலுவல் மொழியாக ஆக்கப்படாது என அறிவித்து போராட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கடந்த காலத்தில் இருந்து தற்போது வரை இந்திக்கு எதிரான போராட்டத்தை தமிழ்நாடு தீவிரமாக எடுத்து வருகிறது. இப்போதும் அவ்வப்போது தமிழ்நாடு நெடுஞ்சாலைகளில் இந்தியில் ஊர் பெயர்களை எழுதுவது. தமிழ்நாட்டில் ரயில் டிக்கெட்டுகளில் தமிழ் இல்லாமல், இந்தி, ஆங்கிலத்தில் டிக்கெட் வழங்குவது போன்ற செயல்கள் நடைபெற்று வருகின்றன. பல பொது சேவை நிறுவனங்கள் கூட தங்களது சேவைகளை மாநில மொழிகளில் வழங்காமல் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் வழங்கி வருகின்றன.

இந்நிலையில் தான் தற்போது இந்தியால் புது பிரச்னை ஒன்று ஜொமேட்டோ நிறுவனத்துக்கு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டை சேர்ந்த விகாஷ் என்பவர் ஜொமேட்டோ ஆப்பின் மூலம் உணவு ஆர்டர் செய்துள்ளார். அவருக்கு முழுமையாக உணவு டெலிவரி செய்யப்படாததால், வாடிக்கையாளர் சேவை மையத்தை அணுகியுள்ளார். அங்கு டெலிவரி செய்யப்பட்ட உணவு குறித்த விவரங்களையும் புகைப்படங்களையும் பெற்று பணத்தை திருப்பி தருவது வழக்கமான ஒன்று. ஆனால், விகாஷ் விவகாரத்தில் சேவை மைய அதிகாரி, மொழி பிரச்னையால் எங்களால் உணவகத்தை தொடர்பு கொள்ள முடியவில்லை என தெரிவித்ததுடன் இந்தியாவின் தேசிய மொழி இந்தி என்பதால் அனைவரும் அதை தெரிந்து வைத்திருக்க வேண்டும் என பதிலளித்துள்ளார்.

இதை கேட்டுவிட்டு இருவருக்கும் இடையே நடைபெற்ற உரையாடல்களை ஸ்க்ரீன் சாட்டாக எடுத்து ட்விட்டரில் விகாஷ் பதிவிட்டார். அது தற்போது ஜொமேட்டோ நிறுவனத்துக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது.

விகாஷ் பதிவிட்ட போஸ்ட்டை தொடர்ந்து நெட்டிசன்கள், இந்திக்கு முக்கியத்துவம் அளிக்கும் உங்களுக்கு எங்களது பணம் மட்டும் வேண்டுமா? எனவும், இந்தி தெரிந்தவர்களுக்கு மட்டும் இனி நீங்கள் உணவு டெலிவரி செய்யுங்கள், தமிழ்நாட்டை விட்டு வெளியேறுங்கள் என்பது போன்ற கமெண்டுகளை #Reject_Zomato என்ற ஹேஸ்டேக்கின் கீழ் பதிவு செய்து வருகின்றனர். இது இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. மேலும், திமுக எம்பிக்கள் கனிமொழி, செந்தில்குமார் போன்றவர்களும் ஜொமேட்டோ நிறுவனத்துக்கு எதிராக தங்களது கண்டனத்தைப் பதிவு செய்தனர்.

இதையடுத்து அந்நிறுவனம் தமிழில் சேவை மைய அதிகாரியின் செயலுக்கு வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், வேற்றுமையில் ஒற்றுமை என்ற நம் தேசத்தின் கலாச்சாரத்தின் மீதான எதிர்கருத்தை வாடிக்கையாளரிடம் காட்டிய ஊழியரை பணியிடை நீக்கம் செய்துள்ளோம். சேவை மைய அதிகாரியின் செயல் நிறுவனத்தின் நிலைபாட்டை குறிக்கவில்லை. கோயம்புத்தூரில் தமிழ் கால் சென்ட்டரை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம் என தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மறைந்த முலாயம் சிங் யாதவ்-க்கு நாளை இறுதி சடங்கு

G SaravanaKumar

ஓபிஎஸ் 2வது மகன் தேர்தலில் போட்டியிட விருப்பமனு!

Niruban Chakkaaravarthi

நவராத்திரிக்காக 9 நிற உடையில் வர வேண்டுமா? சு. வெங்கடேசன் எம்.பி கண்டனம்

Halley Karthik