முக்கியச் செய்திகள் விளையாட்டு

டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலி திடீர் விலகல்

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார்.

கடந்த டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின்னர் இந்திய டி 20 போட்டியிலிருந்து கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகினார். பின்னர், ஒருநாள் போட்டிகளில் இருந்து அவர் அதிரடியாக நீக்கப்பட்டார். டெஸ்ட் அணிக்கு மட்டும் அவர் கேப்டன் பதவி வகித்து வந்தார். இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. இதில் 2-1 என்ற கணக்கில் தொடரை இழந்துள்ளது. இந்நிலையில், இந்திய அணியின் டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலி திடீரென விலகியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இந்திய அணியின் கேப்டனாக நீண்ட நாளாக பணியாற்ற வாய்ப்பு அளித்தமைக்காக பிசிசிஐக்கு நன்றி என குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்திய அணிக்கு தலைமையேற்க தகுதியானவர் என நம்பிக்கை வைத்த தோனிக்கு நன்றி தெரிவிப்பதாக கூறியதுடன் அணியை சிறப்பாக வழிநடத்த என் மீது நம்பிக்கை வைத்து தொடர்ந்து பயணித்த அனைத்து வீரர்களுக்கும் நன்றி என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

லக்கிம்பூர் கெரி; அமைச்சர் பதவி விலக வேண்டும் – ராகுல் காந்தி

Halley Karthik

கொரோனா தடுப்பூசி விலை ரூ. 200 -சீரம் நிறுவனம்

Niruban Chakkaaravarthi