தமிழ்நாடு முழுவதும் 31 மணி நேர முழு ஊரங்கு அமல் படுத்தபட்டுள்ளதையடுத்து, இரவு 10 மணி முதல் சாலைகள் வெறிச்சோடியது.
தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வருவதை தடுக்கும் வகையில், 14ஆம் தேதி முதல் நான்கு நாட்களுக்கு வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையான இன்று, முழுஊரடங்கு மீண்டும் கடைபிடிக்கப்படுகிறது. இதன்காரணமாக வழக்கமாக உற்சாகத்துடன் இன்று கொண்டாடப்படும் காணும்பொங்கல் விழா, களையிழந்தது. நேற்று இரவு 10 மணி முதல் நாளை அதிகாலை
காலை 5 மணிவரை 31 மணிநேர முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதனையடுத்து சென்னை மாநகரில் 320 இடங்களில் வாகன தணிக்கை சாவடிகள் அமைத்தும், 490 இடங்களில் தடுப்புகள் அமைத்தும் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட காவலர்கள் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அத்தியாவசிய தேவையின்றி வாகனங்களில் சுற்றியவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து திருப்பி அனுப்பினர். மேலும் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபாரதம் விதித்தனர். அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் ஊழியர்கள், தங்கள் அடையாள அட்டைகளை காண்பித்த பிறகே போலீசார் அனுமதி வழங்கி வருகின்றனர். இதனிடையே முழுஊரடங்கு காரணமாக பேருந்துகள் உள்ளிட்ட பொதுபோக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து கோயம்பேடு பேருந்து நிலைய வளாகம் நேற்றிரவு முதல் பேருந்துகள் ஏதுமின்றி வெறிச்சோடி காணப்பட்டது







