முக்கியச் செய்திகள் இந்தியா

5 மாநில தேர்தல் பொதுக்கூட்டங்களுக்கான தடை நீட்டிப்பு

உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்களில் பொதுக்கூட்டங்களுக்கு ஜனவரி 22-ம் தேதி வரை தடை நீட்டிக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களில் பிப்ரவரி 10-ம் தேதி முதல் மார்ச் 7-ம் தேதி வரை சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா ஆகிய மாநிலங்களுக்கு ஒரே கட்டமாகவும், மணிப்பூரில் 2 கட்டமாகவும், உத்தர பிரதேசத்தில் 7 கட்டங்களாகவும் தேர்தல் நடைபெறுகிறது. வாக்குகள் மார்ச் 10-ம் தேதி எண்ணப்படுகிறது.

இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக 5 மாநிலங்களிலும் தேர்தல் பொதுக்கூட்டங்களுக்கு விதிக்கப்பட்ட தடை இன்றுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, இது தொடர்பான ஆலோசனை கூட்டம் மாநில தேர்தல் அதிகாரிகளுடன் இன்று நடைபெற்றது. ஆலோசனை முடிவில் தொற்று பரவல் கட்டுக்குள் வராமல் அனைத்து மாநிலங்களிலும் அதிகரித்து வருவதால் தேர்தல் பொதுக்கூட்டங்களுக்கு ஜனவரி 22ம் தேதி வரை தடை நீட்டிக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

Advertisement:
SHARE

Related posts

ஸ்டேன் ஸ்வாமிக்கு முதலமைச்சர் புகழஞ்சலி

Vandhana

ஆப்கனின் தலையெழுத்தை திருத்திய தலிபான்கள்!

Saravana Kumar

தேஜஸ் ஸ்லீப்பர் இரயில்களை அறிமுகப்படுத்துகிறது மத்திய இரயில்வே துறை!

Niruban Chakkaaravarthi