சுற்றுலா பயணிகளின் காரை தன் குட்டியுடன் வந்து தாய் யானை சேதப்படுத்தும் காட்சி இணையத்தில் வரலாகி வருகிறது.
கேரள மாநிலம் திருசூர் அருகே சுற்றுலா பயணிகள் சென்ற காரை குட்டி யானை உடன்
சேர்ந்து வந்து காட்டு யானை ஒன்று சேதப்படுத்தியுள்ளது. இதில் சுற்றுலா பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
கேரள மாநிலம் திருசூர் அருகே ஆதிரபள்ளிக்கு சுற்றுலா செல்ல ஆணைமலை வன பகுதி வழியாக சொகுசு காரில் சுற்றுலா பயணிகள் வந்து கொண்டிருந்தனர். அப்போத காட்டுப் பகுதியில் தாய் மற்றும் குட்டி யானைகள் நின்று கொண்டிருந்ததை பயணிகள் கண்டு ரசித்தனர்.
இந்த நிலையில் கோபமடைந்த யானைகள் வேகமாக வந்து காரை சேதப்படுத்த தொடங்கியது. சுற்றுலா பயணிகள் காரை பூட்டி பாதுகாப்பு இருந்து கொண்டு அச்சத்தில் கூச்சல் போட்டு உதவிக்கு அழைத்தனர்.
சுற்றுலா பயணிகளைன் அலறல் சப்தத்தை கேட்டு யானை திரும்பி சென்றதால அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி
வருகிறது.







