ரீ-ரிலீஸில் சாதனை… 1000 நாட்களைக் கடந்தது #VinnaithaandiVaruvaayaa!

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ திரைப்படம் ரீ-ரிலீஸில் சாதனை படைத்துள்ளது. கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு, த்ரிஷா நடிப்பில் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்த திரைப்படம் ‘விண்ணைத்தாண்டி…

'Vinnai Thandi Varuvaya' directed by Gautham Vasudev Menon has set a record in re-releases.

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ திரைப்படம் ரீ-ரிலீஸில் சாதனை படைத்துள்ளது.

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு, த்ரிஷா நடிப்பில் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்த திரைப்படம் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’. பின்னணியில் ஏ.ஆர் ரகுமான் இசை, திரையில் கார்த்திக் – ஜெஸியின் காதல் ரசிகர்களைப் படம் வெளியாகி 14 ஆண்டுகள் அடந்துள்ளது. 2010ம் ஆண்டு வெளியான இப்படம் இன்றும் காதலர்களின் விருப்பப் படமாகவே நீடிக்கிறது.

இதையும் படியுங்கள் : Google தலைமை தொழில்நுட்ப நிபுணராக இந்தியாவை சேர்ந்த பிரபாகர் ராகவன் நியமனம்!

திரைக்கு வந்த 14 ஆண்டுகளில் ஒவ்வொரு காதலர் நாளன்றும் சிறப்பு திரையிடலைக் கண்டு வருகிறது. முக்கியமாக, சென்னை பி.வி.ஆர் வி.ஆர் திரையில் ரீ-ரிலீஸில் இப்படம் இன்றுடன் 1000-வது நாளைக் கொண்டாடுகிறது. இந்த வி.ஆர் திரையில் மட்டும் கடந்த 142 வாரங்களாக இப்படம் ஒரு காட்சியாவது திரையிடப்பட்டு வருகிறது. இந்தியளவில் ரீ-ரிலீஸில் அதிக நாள்களைக் கடந்த திரைப்படம் என்கிற சாதனையை பெற்றுள்ளது விண்ணைத்தாண்டி வருவாயா. தமிழ் சினிமாவில் இதுவரையில் வெளியான காதல் திரைப்படங்களில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்திற்கு ஒரு முக்கிய இடம் உண்டு.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.