விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறையை முன்னிட்டு, வெளியூா் செல்லும் பயணிகளுக்காக கூடுதல் மெட்ரோ ரயில் இயக்கப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது :
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
எதிர்வரும் திங்கள்கிழமை (18.09.2023) அன்று விநாயகர் சதுர்த்தி பொது விடுமுறை அறிவிப்பை தொடர்ந்து, சொந்த ஊருக்கு செல்லும் மெட்ரோ ரயில் பயணிகளின் வசதிகாக நெரிசல்மிகு நேரத்தில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ இரயில் சேவை, இன்று 15.09.2023 மட்டும் இரவு 10:00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
நீட்டிக்கப்பட்ட நெரிசல்மிகு நேரங்களில், இரவு 8:00 மணி முதல் 10:00 மணி வரை மெட்ரோ இரயில் சேவைகள் இரண்டு வழித்தடங்களிலும் 9 நிமிட இடைவெளிக்கு பதிலாக 6 நிமிட இடைவெளியில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.