விழுப்புரம் நகராட்சியில் நடைபெறும் வளர்ச்சி திட்டப் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் கே.என்.நேரு விழுப்புரம் விரைவில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று உறுதியளித்தார்.
விழுப்புரம் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட மகாராஜபுரம், கீழபெரும்பாக்கம், பாண்டியன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் நவீன மின் தகன மேடை, பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகின்றன.
இப்பணிகளை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு, ”தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் பணிகளை ஆய்வு செய்ய வருகை தர உள்ளார். எனவே அதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இதையும் படியுங்கள் : புனித யாத்திரையை முன்னிட்டு கேதார்நாத் கோயில் நடை திறப்பு!!
இங்கு நடைபெற்று வரும் பாதாள சாக்கடைப் பணிகள் இரண்டு மாதங்களில் முடிவடையும். விழுப்புரம் நகராட்சியின் தற்போதைய மக்கள் தொகை 6 லட்சத்திற்கும் குறைவாக இருப்பதால், அது ஆறு லட்சத்தை எட்டியவுடன் விழுப்புரம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும்” என்று தெரிவித்தார்.
– வேந்தன்







