ஸ்ரீவில்லிபுத்துார் அருகே மின்னல் தாக்கி ஒரு பெண் உயிரிழந்துள்ளார். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்துார், சிவகாசி, ராஜபாளையம் போன்ற பகுதிகளில் சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்துார் நகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது.
இதில் விவசாய பணிக்கு சென்று வீடு திரும்பி வந்த சண்முக சுந்தரபுரம் பகுதியைச் சேர்ந்த பொன்னுத்தாய் வயது 50. அவரது மகள் சங்கீதா 23, உறவினர்கள் சமுத்திரக்கனி 15, கிருஷ்ணவேணி 19, முத்துமாரி 37 ஆகியோரை மின்னல் தாக்கியது.
இதில் பொன்னுத்தாயும், சங்கீதாவும் படுகாயம் அடைந்தனர். இதே போல பிள்ளையார் நத்தம் பகுதியைச் சேர்ந்த போஸ் குமார் 35, இவர் தனது வீட்டு மாட்டு தொழுவத்தில் பால் கறந்து கொண்டிருந்தார். அப்போது மின்னல் தாக்கியதில் பசுமாடு உயிரிழந்தது.
போஸ் குமார் படுகாயம் அடைந்தார். இதில் மின்னல் தாக்கிய 6 பேரையும் ஸ்ரீவில்லிப்புத்துார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் பொன்னுத்தாயி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து ஸ்ரீவில்லிப்புத்துார் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அனகா காளமேகன்







