‘விக்ரம்’ திரைப்படம் 100 வது நாளை எட்டிய நிலையில் நடிகர் கமல்ஹாசன் தனது சமூக வலைதளப்பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் திரைப்படம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா என நட்சத்திர பட்டாளமே முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது.
இந்த படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெயிலர் மிக பிரம்மாண்டமாக வெளியீடு செய்யப்பட்டது. தமிழ் தெலுங்கு என பல மொழிகளில் வெளியாகி ரூ.400 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்த இந்த திரைப்படம் 100 வது நாளை எட்டியது. இதனை ரசிகர்கள் மகிழ்சியாக கொண்டாடி வருகின்றனர்.
இது தொடர்பாக தனது சமூக வலைதளப்பக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ரசிகர்களின் ஆதரவோடு விக்ரம் திரைப்படம் 100 வது நாளை எட்டியுள்ளது. தலைமுறைகளை தாண்டி என்னை ரசிக்கும் உங்கள் ஒவ்வொருவரையும் மானசீகமாக தழுவிக்கொள்கிறேன். விக்ரம் திரைப்பட வெற்றிக்கு காரணமாக இருந்த அனைவருக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள் என தெரிவித்த நடிகர் கமல்ஹாசன், தம்பி லோகேஷ்-க்கு எனது அன்பும் வாழ்த்தும்” என நெகிழ்சியுடன் தெரிவித்தார்.
அ. மாரித்தங்கம்







