இங்கிலாந்தின் புதிய மன்னரானார் 3ம் சார்லஸ்

இங்கிலாந்தின் புதிய அரசராக சார்லஸ் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளார். அதற்கான பிரகடனத்தில் மன்னர் சார்லஸ் கையொப்பமிட்டார். இங்கிலாந்தின் நீண்டகால அரசியாக இருந்த இரண்டாம் எலிசபெத் உடல்நலக் குறைவால் காலமானார். கடந்த சில தினங்களாக மருத்துவர்களின்…

இங்கிலாந்தின் புதிய அரசராக சார்லஸ் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளார். அதற்கான பிரகடனத்தில் மன்னர் சார்லஸ் கையொப்பமிட்டார்.

இங்கிலாந்தின் நீண்டகால அரசியாக இருந்த இரண்டாம் எலிசபெத் உடல்நலக் குறைவால் காலமானார். கடந்த சில தினங்களாக மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்த அவர் கடந்த 8ம் தேதி இரவு காலமானார். அவரது மறைவிற்கு பல்வேறு நாட்டின் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்தியாவில் எலிசபெத்தின் மறைவையொட்டி ஒருநாள் அரசு துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அதன்படி, நாளை (செப்டம்பர் 11ம் தேதி) நாடு முழுவதும் அரசு துக்கம் அனுசரிக்கப்படும் எனவும், அந்நாளில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அன்றைய நாள் அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ராணி இரண்டாம் எலிசபெத் உயிரிழந்ததையடுத்து இங்கிலாந்தின் புதிய அரசராக  3-ம் சார்லஸ் அரியணை ஏறவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. சார்லஸ் பிலிப் அர்துர் ஜார்ஜ் என்ற இயற்பெயர் கொண்ட 3-ம் சார்லஸ் உயிரிழந்த இரண்டாம் எலிசபெத்தின் மூத்த மகன் ஆவார். 73 வயதான சார்லஸ் இங்கிலாந்தின் புதிய அரசராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் அரியணை ஏறும் விழா விரைவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய அரசராக பதவியேற்கவுள்ள 3-ம் சார்லஸ் முதல் முறையாக நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், மகாராணி இரண்டாம் எலிசபெத் மறைவு உலகிற்கு எவ்வளவு பெரிய இழப்பு என்பதை நான் அறிவேன். மகாராணி எலிசபெத்தை இழந்து தவிக்கும் மக்களின் துக்கத்தில் நானும் பங்கேற்கிறேன். மறைந்த மகாராணி இரண்டாம் எலிசபெத் மக்களுக்கு சேவை செய்ய தனது வாழ்க்கையை முழுமையாக அர்ப்பணித்தவர்.

நாட்டு மக்களுக்கு மதம் கடந்து சேவையாற்ற கடமைப்பட்டுள்ளேன். அன்பு, விசுவாசம், மரியாதையோடு என் வாழ்நாள் முழுதும் மக்களுக்காக சேவை ஆற்றுவேன். அரசியல் சார்ந்த கோட்பாடுகளின் வழிதொடர்ந்து நடப்பேன். நான் விரும்பி செய்யும் சமூக சேவை பணிகளில் என்னால் அதிக நேரம் செலவிட முடியாத நிலை உள்ளது. இங்கிலாந்து இளவரசராக வில்லியம் செயல்படுவார் எனக் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.