ஆலோசனைகள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகளுக்குப் பிறகு, ஆங்கிலம் மற்றும் தமிழில் LGBTQIA+ சமூகத்தினரை எப்படி அழைக்க வேண்டும் என்று ஊடகங்கள் பயன்படுத்த வேண்டிய சொற்களஞ்சியத்தையும் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
இதன்மூலம், LGBTQIA+ சமூகத்திற்கு எதிரான இழிவான மற்றும் இழிவுபடுத்தும் சொற்கள் இனி நீங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பால்சார் சொற்கள், பாலினம்சார் சொற்கள், பாலியல்புசார் சொற்கள், ஒருமித்த சொற்கள், சமூகம்சார் பிற சொற்கள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. பால்சார் சொற்கள் பிரிவில், sex என்ற சொல்லிற்கு பால், பால் பகுப்பு, பால் பிரிவு என்று அர்த்தம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஆங்கிலத்திலும் தமிழிலும் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
Transgender person என்ற வார்த்தைக்கு மருவிய பாலினம், மாறிய பாலினம் என்று அர்த்தம் கொடுக்கப்பட்டுள்ளது. Trans woman என்றால் திருநங்கை, Trans man என்றால் திருநம்பி, Gender non-binary person என்றால் பாலின இருநிலைக்கு அப்பாற்பட்டவர், Gender Dysphoria என்றால் பாலின மன உளைச்சல் என்று அர்த்தம் கொடுக்கப்பட்டுள்ளது.
Homosexuality – தன்பாலின ஈர்ப்பு, தன்பாலீர்ப்பு, பாலீர்ப்புடைய ஆண், தன் பாலீர்ப்புடைய பெண், தன் பாலின ஈர்ப்புடைய பெண்.
Bisexuality/Bisexual – இருபாலீர்ப்பு, இருபாலின ஈர்ப்பு
Pansexuality-அனைத்து பாலீர்ப்பு
LGBTIQA+ -ஒருபாலீர்ப்பு கொண்டவர்கள்
LGBTQIA+- இருபாலீர்ப்பு/ இருபாலின ஈர்ப்பு கொண்டவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்னும் இதுபோன்று மேலும் பல வார்த்தைகளுக்கு ஆங்கிலத்திலும் தமிழிலும் விளக்கம் அளித்து பின்பற்றப்பட வேண்டிய சொற்களையும் தமிழக அரசு அளித்துள்ளது.








