முக்கியச் செய்திகள் சினிமா

“விக்ரம்” திரைப்படம் ரூ. 150 கோடி வசூல் சாதனை

விக்ரம் திரைப்படம் வெளியாகிய மூன்று நாட்களில் உலக அளவில் ரூ. 150 கோடி வசூல் சாதனை செய்துள்ளது. 

கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள விக்ரம் திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படத்தில், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், சிறப்புத் தோற்றத்தில் சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கமல் நடித்த படங்களிலேயே மிக அதிகமான வசூலை விக்ரம் திரைப்படம் குவித்துள்ளது. இத்திரைப்படம் சென்னையில் முதல் நாளில் ரூ. 1.70 கோடி வசூல் செய்தது. தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 25 கோடி வசூல் செய்துள்ளது. இந்தியாவில் ரூ. 40 கோடியும், உலக அளவில் ரூ. 55 கோடியும் வசூல் செய்தது. உலக அளவில் முதல் மற்றும் இரண்டு நாட்கள் சேர்த்து ரூ. 100 கோடி வசூல் செய்துள்ளது.

இந்நிலையில், விக்ரம் திரைப்படம் வெளியாகிய 3 நாட்களில் உலக அளவில் ரூ. 150 கோடி வசூல் சாதனை செய்துள்ளது. இந்தியாவில் மட்டும் 100 கோடி வசூல் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த சில வாரங்களில் மிக அதிமான வசூலை விக்ரம் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கொரோனாவைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை: டி.ஆர்.பாலு

EZHILARASAN D

இலங்கை கடற்படை அட்டகாசம்; ராமேஷ்வரம் மீனவர்கள் போராட்டம்

G SaravanaKumar

எம்.எல்.ஏ-வை முற்றுகையிட்ட மாணவிகள்

Halley Karthik