கேரளாவில் இரண்டு மாணவர்களுக்கு நோரோ வைரஸ் உறுதி

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள தொடக்க பள்ளியில் படித்துவரும் 2 மாணவர்களுக்கு நோரோ வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நோரோ வைரஸ் எளிதில் பரவும் தன்மை கொண்டதாகவும், சுகாதாரமற்ற உணவு, தண்ணீர் மற்றும் மேற்பரப்புகள்…

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள தொடக்க பள்ளியில் படித்துவரும் 2 மாணவர்களுக்கு நோரோ வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

நோரோ வைரஸ் எளிதில் பரவும் தன்மை கொண்டதாகவும், சுகாதாரமற்ற உணவு, தண்ணீர் மற்றும் மேற்பரப்புகள் மூலமாக இந்த வைரஸ் பரவக் கூடும். வாந்தி, வயிற்றுப்போக்கு, காய்ச்சல் ஆகியவை அறிகுறிகளாகும்.

இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகையில், “இன்னும் அதிகமான மாதிரிகள் மாணவ-மாணவிகளிடம் இருந்து சேகரிக்கப்பட்டு சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முதல்கட்ட விசாரணையில் பள்ளியில் வழங்கப்பட்ட மதிய உணவால் இந்த வைரஸ் தொற்றால் மாணவர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது” என்று தெரிவித்தனர்.

கேரள கல்வித் துறை அமைச்சர் வி.சிவன்குட்டி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது, மதிய உணவை பாதுகாப்பானதாக தயார்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. கடந்த ஆண்டு நவம்பரில் வயநாட்டில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில் 12க்கும் மேற்பட்ட மாணவர்கள் நோரோ வைரஸால் பாதிக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.

நோரோ வைரஸ் பாதிப்பு அறிகுறிகள்:

அனைத்து வயதைச் சேர்ந்தவர்களையும் நோரோ வைரஸ் தாக்குகிறது. அடிவயிற்றில் வலி, காய்ச்சல், தலைவலி, உடல் வலி, குமட்டல் ஆகிய பாதிப்புகள் இதன் அறிகுறிகளாகும். போதிய ஓவ்வு எடுத்தால் தானாகே உடல்நிலை தேறும். உணவு தயாரிப்பதற்கு முன் சோப் கொண்டு கைகளை அவ்வப்போது கழுவிக் கொள்வதன் மூலம் இந்த வைரஸ் பரவாமல் தடுக்க முடியும். இந்த வைரஸ் வராமல் தடுப்பதற்கு தடுப்பூசி எதுவும் இல்லை.

-மணிகண்டன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.