ரயில் நிலையத்தில் நள்ளிரவில் நடைபெற்ற விஜய் சேதுபதி நடிக்கும் ‘ட்ரெயின்’
படப்பிடிப்பினை பார்க்கச் சென்ற கூலி தொழிலாளி திடீரென மயக்கமடைந்து உயிரிழந்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ரயில் நிலையத்தில் நள்ளிரவு 12 மணி முதல் விடியற்காலை 6 மணி வரை நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் ‘ட்ரெயின்’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் கதாநாயகன் இல்லாத காட்சிகள் ஆம்பூர் ரயில் நிலையத்தில் படமாக்கப்பட்டது. அப்போது படப்பிடிப்பினை வேடிக்கை பார்க்க வந்த ஆம்பூர் மோட்டுகொல்லை பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி முஸ்தாக்(28) என்பவருக்கு திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார்.
இதனை அறிந்த படப்பிடிப்புக் குழுவினர் மற்றும் ரயில்வே போலீசார் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படியுங்கள் : வெளியானது #Devara படத்தின் ட்ரெய்லர்! – இணையத்தில் வைரல்!
ஆம்பூர் ரயில் நிலையத்தில் நள்ளிரவில் நடைபெற்ற படப்பிடிப்பினை வேடிக்கை
பார்க்க சென்ற கூலி தொழிலாளி திடீரென மயக்கமடைந்து உயிரிழந்த சம்பவம் குறித்த
வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.







