லப்பர் பந்து படத்தின் ‘#DammaGoli’ பாடல் வெளியீடு!

லப்பர் பந்து திரைப்படத்தின் ‘டம்மா கோலி’ என்ற பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்த ‘லப்பர் பந்து’ திரைப்படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்ட கதையாகும். இதனை அறிமுக இயக்குனர்…

The song 'Damma Goli' from the movie Lubber Bandhu has been released and is going viral on the internet.

லப்பர் பந்து திரைப்படத்தின் ‘டம்மா கோலி’ என்ற பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்த ‘லப்பர் பந்து’ திரைப்படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்ட கதையாகும். இதனை அறிமுக இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து எழுதி இயக்கியுள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தில் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, பால சரவணன், காளி வெங்கட், ஸ்வாசிகா விஜய் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர்.

இதையும் படியுங்கள் : KolkataDoctorDeathCase | மேற்குவங்கத்தில் தொடரும் மருத்துவர்கள் போராட்டம்!

ஹரிஷ் கல்யாண் இந்த திரைப்படத்தில் அன்பு என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்துக்கு ஷான் ரோல்டன் இசை அமைத்துள்ளார். தினேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து,’லப்பர் பந்து’ திரைப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும்,’லப்பர் பந்து’ திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் 20ம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது. படத்தின் மூன்றாவது பாடலான டம்மா கோலி என்ற பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த பாடல் ஒரு கானா பாடலாக அமைந்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.