வெளியானது #Devara படத்தின் ட்ரெய்லர்! – இணையத்தில் வைரல்!

ஜூனியர் என்டிஆர் – ஜான்வி கபூர் கபூர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தேவாரா ‘ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. டோலிவுட்டின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். ஆர்ஆர்ஆர் திரைப்படத்திற்கு பின்…

Junior NTR, Janhvi Kapoor starrer 'Dewara' trailer released

ஜூனியர் என்டிஆர் – ஜான்வி கபூர் கபூர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தேவாரா ‘ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

டோலிவுட்டின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். ஆர்ஆர்ஆர் திரைப்படத்திற்கு பின் கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் ‘தேவாரா’ படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது. இதில் ஜான்வி கபூர், சைப் அலிகான், பிரகாஷ் ராஜ், ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் மூலம் ஜான்வி கபூர் தென்னிந்திய திரையுலகில் கதாநாயகியாக கால் பதித்துள்ளார்.யுவசுதா ஆர்ட்ஸ்ட் மற்றும் என்.டி.ஆர் ஆர்ட்ஸ்ட் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்து, ஐதராபாத் ஆகிய பகுதிகளில் மிக தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் படத்தின் இறுதி கட்ட பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.சமீபத்தில், இப்படத்தின் 3 பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றன.

இதையும் படியுங்கள் : #vandebharat ரயிலை சேதப்படுத்தும் இளைஞர் – இணையத்தில் வைரலாகும் வீடியோ!

தேவரா திரைப்படம் செப்டம்பர் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகயுள்ளது. இந்நிலையில், தற்போது இந்த திரைப்படத்தின் முதல் பாடல் கவனம் பெற்ற நிலையில், தற்போது ட்ரெய்லரை வெளியிட்டுள்ளனர். அதிரடியான சண்டைக்காட்சிகளால் உருவான இந்த ட்ரெய்லர் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.