“தளபதி-66” முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு: படக்குழு அறிவிப்பு

“தளபதி 66” திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. பீஸ்ட் படத்தைத் தொடர்ந்து விஜயின் 66ஆவது படத்தை எதிர்நோக்கியுள்ளனர் அவரது ரசிகர்கள். இந்நிலையில், விஜயின் அடுத்த படத்தை இயக்குகிறார் இயக்குநர் வம்சி. இசையமைப்பாளர்…

“தளபதி 66” திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

பீஸ்ட் படத்தைத் தொடர்ந்து விஜயின் 66ஆவது படத்தை எதிர்நோக்கியுள்ளனர் அவரது ரசிகர்கள். இந்நிலையில், விஜயின் அடுத்த படத்தை இயக்குகிறார் இயக்குநர் வம்சி. இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார்.

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியாகவுள்ள இத்திரைப்படத்தை தில் ராஜூ இயக்கவுள்ளார். இத்திரைப்படத்தில், சரத்குமார், ஷாம் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். விஜய்க்கு ராஷ்மிகா மந்தனா ஜோடியாக நடிக்கிறார். இப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ஜூன் 22ஆம் தேதி விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாக வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியாகியுள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த சில நாள்களுக்கு முன்பு நடிகர்கள் பிரகாஷ்ராஜ், பிரபு, நடிகை ஜெயசுதா ஆகியோரும் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. இத்திரைப்படம் 2023 பொங்கல் அன்று ரிலீஸாக உள்ளது. பிரபல நடிகர்களின் பட்டாளம் இப்படத்தில் இணைந்திருப்பது இப்படத்தின் எதிர்பார்ப்பை ரசிகர்களின் மத்தியில் மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக விஜய், வம்சியுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஜூன் 3ஆம் தேதி முதல் சென்னை கோகுலம் ஸ்டுடியோவில் நடைபெறவுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.