பாஜகவில் இருந்து விலகி தவெகவில் இணையும் விஜயதாரணி!

பாஜகவில் இருந்து விலகி தவெகவில் விஜயதாரணி இணைய உள்ளார்.

விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த விஜயதாரணி அக்கட்சியில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக கடந்த 2024-ம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். பாஜக சார்பில் கடந்த சட்டமன்ற தேர்தலில் விளவங்கோடு தொகுதியில் போட்டியிட்டு விஜயதாரணி தோல்வி அடைந்தார். தேர்தல் நேரத்தில் பாஜகவில் நிர்வாகிகள் முழுமையாக ஒத்துழைக்கவில்லை என ஏற்கெனவே விஜயதரணி அதிருப்தியில் இருந்தார்.

இந்நிலையில் பாஜகவில் இருந்து விலகி தவெகவில் விஜயதாரணி இணைய உள்ளார். பாஜகவில் எந்த பதவியும் வழங்கப்படாத நிலையில் தவெகவில் அவர் இணைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.